ஜோதிடம் – ஓர் அறிமுகம் மற்றும் அதன் கணித வரலாறு

ஜோதிடம் என்பது ஒரு கலையே. இதில் கணிதமும், விஞ்ஞானமும் சேர்த்தே செயல்படுகிறது. இப்பதிவில் ஜோதிடம் பற்றிய சில அடிப்படை விஷயங்களையே காணப்போகிறோம்.

ஜோதிடம் – மெய்யா? பொய்யா?

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஜோதிடத்தை பொய் என்றே கூறுகின்றனர். சிலரே ஜோதிடத்தின்பால் புரிதல் கொண்டு அல்லது சில நம்பிக்கையின் அடிப்படையில் மெய் என்று உணருகின்றனர். இன்று ஜோதிடத்தை நிரூபித்தால் தான் விஞ்ஞானமும் சில தர்க்கம் பேசும் மனிதர்களும் ஒத்துக்கொள்வேன் என்று கூறிவருகின்றனர்.

நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும், ஜோதிடம் என்பது ஒரு தொன்மையான கலையே. இதில் பிரபஞ்ச விஞ்ஞானம்,  சூரியன் முதலான கோள்களின் விஞ்ஞானம் மற்றும்  சக்திகளின் விஞ்ஞானம் அடங்கியுள்ளது.

ஜோதிடம் கூறுபவர்கள் பொய் உரைக்கலாம் அல்லது அவர்களின் கணிப்பு தவறாக இருக்கலாம். அதற்காக ஜோதிடம் பொய்யாகிவிடுமா என்ன?

வான சாஸ்திரம்

ஜோதிடத்தின் அடிப்படையே வான சாஸ்திரம் தான். இதில் இருந்து பிரிந்தது தான் ஜோதிடம் என்னும் கலையும். ஆரம்பகால ஜோதிடம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் உதயம் மற்றும் அஸ்தமனம் (மறைவு) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள், மேகக் கூட்டங்களின் அமைப்பு, காற்றின் தன்மை மற்றும் அது வீசும் திசை மற்றும் இயல்புக்கு மாறான நிகழ்வுகள் இதன் அடிப்படையிலேயே கணிப்புகள் இருந்தன.

உதாரணமாக ஒரு ஆண்டில் பருவ மழை எப்படி இருக்கும், உணவு பஞ்சம் ஏற்படுமா? கொடிய நோய்கள் ஏதும் வருமா? எதிரிகளால் நாட்டிற்கு தொல்லைகள் வருமா? தானிய விளைச்சல் எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் விதமாகவே ஆரம்பகால ஜோதிடம் வானசாஸ்திரம் இருந்தது.

அடுத்த கட்டமாக நாட்டை ஆளக்கூடிய அரசன் குறித்த கேள்விகள் எழும்பின. அடுத்த அரசன் யார்? அரசனுக்கு வெற்றி கிடைக்குமா? நாட்டிற்கு நல்லாட்சி செய்வாரா? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் விதமாக ஜோதிடம் அடுத்த படிநிலையை எட்டியது. இவ்வாறாக இன்று ஜோதிடம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை பற்றியா கேள்விகளுக்கு விடை தேடும் விதமாக வளர்ந்து உள்ளது.

அடிப்படை கேள்விகள்:

நாம் சில விஞ்ஞான விளக்கங்களையும், நம் முன்னோர்கள் , சித்தர்கள் மற்றும் ஜோதிட விஞ்ஞானிகளின் கூற்றை விளக்கத்துடன் தொடர்ந்து காண இருக்கிறோம். 

நம் விதி அல்லது வாழ்க்கையை 9 கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றனவா?

நம் வாழ்க்கையை 12 கட்டங்களில் வைத்து அடைப்பது சரிதானா?

இப்படி பல கேள்விகளை அறிவுடையோர் எழுப்புகின்றனர்.

இன்று வாழ்க்கை கையடக்க கணிப்பொறி அல்லது செல்போன்களில் வந்தவிட்ட களங்களில் கூட இந்த மூடநம்பிக்கை தேவையா என்று என்று சிலர் மனதில் கேள்விகள் உருவாகின்றன. விஞ்ஞானத்தை பற்றி பேசும் மக்கள் கூட வெளிய தெரியாமல் ஜோதிடத்தை நம்பி சில ஜோதிடர்களை நாடுவார்கள். அதேபோல் சாஸ்திரத்தில் முழு நம்பிக்கை வைப்பவர்கள் கூட ஜோதிடத்தை நம்பாமல் இருப்பதும் உண்டு. இது எவ்வாறு எனில், சில மனிதர்கள் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவை பெற்றும், கணிப்பொறி அல்லது செல்போனில் உள்ள சில அம்சங்களை பற்றி அறிந்து இருக்கமாட்டார்கள் அல்லது அதன் முழுமையான பயன்பாடு தெரியாது.

ஜோதிடத்தை பற்றி நமக்கு அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை கிடைத்துள்ள சான்றுகளில் மிக மிக பழமையானவை பாபிலோனியா அரசு காலத்தில் எழுதப்பட்ட சில களிமண் பலகைகளே குறிப்பிடுகின்றன.

எந்தவிதமான நவீன விஞ்ஞான கருவிகளும் இல்லாத பழமையான காலத்திலேயே மனிதன் காலத்தை அளக்க துவங்கிவிட்டான் என்பதை அறியும் பொது வியப்பும் பெரும் மலைப்புமே தோன்றுகிறது. சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

எப்படி இந்த ஜாதகத்தின் அமைப்பு நம்மை வந்தடைகிறது ? விதி வசம் ஆகிறது. நம் உடல் எப்படி செயல் படுகிறது?  இவ்வளவு தூரம் உள்ள கிரகங்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? மேலும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு தனி தனியாக கிரங்கங்கள் பலன்களை அளிக்கின்றன? என்பவற்றை பற்றி ஆராய்வோம்.

முதலில் நம் ஜாதக புத்தகத்தில் ஒரு வாசகம் முதல் பக்கத்திலே காணப்படும். அது என்ன?

ஜனனி ஜன்ம ஸௌக்யானும் வர்த்தனீ குலஸம்பதாம் பதவி பூர்வ புன்யாநாம் லிக்யதே ஜந்ம பத்ரிக”

இதன் அர்த்தம் ஒரு குழந்தை தன் முற்பிறப்பில் செய்த பாவம் புண்ணியம் இவற்றை தழுவியே இப்பிறவியில்  அப்பலன்களை அனுபவிக்க பிறவி எடுக்கிறது என்பதே ஆகும்.

அடுத்து உங்கள் மனதுள் ஒரு சந்தேகம் வரும் முற்பிறவி அடுத்த பிறவி இதெல்லாம் உண்மையா? இதற்கு சான்றுகள் உண்டா? நிருபிக்க முடியுமா இது போன்ற கேள்விகளுக்கு வரும் பதிவுகளில் விடை காண்போம்.

நம் முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்தின் கணக்கை எப்படி வகுத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

காலக்கணிதம்:

வருட கணக்கு

30 நாட்கள் – 1 மாதம்

12 மாதம் – 1 வருடம்

30 x 12 – 360 நாட்கள்  – 1 மனித வருடம்

12000 மனித வருடம் – 1 கடவுளின் வருடம்

கால கணக்கு

1 கடவுளின் வருடம் 4 யுகங்களை கொண்டது

கிருதயுகம் – 4800 வருடம்

திரேதாயுகம் – 3600 வருடம்

துவாபரயுகம் – 2400 வருடங்கள்

கலியுகம் – 1200 வருடம்

12000 கடவுளின் வருடம் – 1 கதிர்யுகம்

1 கதிர்யுகம் என்பது 4320000 மனித வருடங்கள்  (அதாவது 360 x 12000 = 4320000 )

1000 கதிர்யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பம்

அதாவது 432 கோடி வருடங்கள் சேர்ந்தது ஒரு கல்பம்

பிரபஞ்சத்தின் (பிரம்மா) காலக்கணக்கு

ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்த 24 மணிநேரமே மனிதர்களுக்கான ஒரு நாள்.

அப்படியானால் பிரபஞ்சத்தின் (பிரம்மா) ஒருநாள் எவ்வளவு தெரியுமா?

பிரபஞ்சத்தின் (பிரம்மா) 1 பகல் – 1 கல்பம் – 432 கோடி வருடங்கள்

பிரபஞ்சத்தின் (பிரம்மா) 1 இரவு – 1 கல்பம் – 432 கோடி வருடங்கள்

இதன் மூலம் பிரபஞ்சத்தின் (பிரம்மாவின்) ஒரு நாள் என்பது இரண்டு கல்பங்கள்

360 பிரம்ம (பிரபஞ்சத்தின் ) நாட்கள் சேர்ந்தது ஒரு பிரம்ம (பிரபஞ்ச) வருடம்

ஒரு பிரம்ம நாள் – 864 கோடி வருடங்கள்

1 பிரம்ம வருடம் –  864 கோடி  x 360 = 3.1104 x 10 12  வருடங்கள்

இதன் படி,

பிரம்மாவின் ஆயுள் என்பது 100 பிரம்மவருடங்கள்

864 கோடி x 360 x 100 =3.1104 x 10 14  வருடங்கள்

4 யுகங்கள் – 1 சதுர்யுகம்

4 சதுர்யுகம் – 1 மன்வந்தரம்

7 மன்வந்தரம் – பிரபஞ்சத்தில் ஒரு அணு கூட இருக்காது.

தொடங்கிய அனைத்திற்கும் என்றாவது ஒரு நாள் முடிவு  உண்டு. பிரம்மாவும் (பிரபஞ்சமும்) இதற்கு விதிவிலக்கல்ல. 100 பிரம்மவருடங்கள் வாழ்ந்த பின் பிரம்மம் (பிரபஞ்சம்) அழிந்து போகும் பின்னர் மீண்டும் பிறக்கும்.

எவ்வித நவீன கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே வானத்தை ஆராய்ந்து இத்தகைய ஒரு பிரபஞ்ச நாட்காட்டியை  (காலண்டர்)  உருவாக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் சுமார் 10000 ஆண்டுகளாவது தினமும் வானத்தை ஆராய்ந்து குறிப்புகள் எழுதி வந்தால் மட்டுமே சாத்தியம்.

இத்துடன் இந்த பதிவை முடித்து கொள்வோம். இதற்குமேல் சிந்தித்தால் மூளை சூடு உருவாகிவிடும்.

                                                        …………………………………………….. தொடரும் 

2 thought on “ஜோதிடம் – ஓர் அறிமுகம் மற்றும் அதன் கணித வரலாறு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English