அனைவருக்கும் வணக்கம்,

நாம் தொடர்ந்து Universal Laws  வரிசையில் பார்க்கப்போற விதி அதிர்வு விதி (Law of Vibration). அதிர்வு விதி என்பது இந்த பிரபஞ்சத்துல உள்ள அனைத்து விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைல தோற்ற்ச்சியாக இயங்கிக்கொண்டு இருக்கு. மேலும் அந்த இயக்க ஒரு அலை வடிவிலே அதிர்வுகளாக இருக்கு.

இந்த அதிர்வு உருவம் மற்றும் உருவமற்ற விஷயங்களிலும் இருக்கு. நமக்கு எல்லாருக்கும் ஒரு அளவுக்கு அணு பற்றி தெரியும். இந்த பிரபட்சமே அணுக்களால் ஆனது. இந்த அணுக்களுடைய நகர்வு எப்பொதும் அதிர்வுகள் மற்றும் சுற்றுகளாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும். இப்படி தான் அணுக்கள் இயக்கி கொண்டு  இருக்கும். சரி இந்த அதிர்வுகள் பொருட்களில் மட்டும் தான் இருக்கானா? இல்லை, முன்பு சொன்னதுபோல இந்த அதிர்வுகள் நம்ம எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் போன்றவைகளுக்கும் இருக்கு.

அதிர்வு – ஒரு குறிப்பிட்ட காலத்துல ஒரு துகள் முன்னும் பின்னும் நகர்வது தன அதிர்வுன்னு சொல்லுறாங்க. இந்த அதிர்வுகள் எப்போதும் ஒரு இடத்துல இருந்து அடுத்த இடத்திற்கு போகும் போது ஒரு அலைவடிவுகள் இருக்கும். மேலும் இந்த அதிர்வுகளை அலைவரிசைகள் மூலமா தெரிச்சுக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேர அளவுல ஏற்படும் சுழற்சி அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை தான்  அலைவரிசைனு சொல்லுறோம். இதை Hz / ஹெட்ஸ் அப்படிக்குற அலகு மூலமா குறிப்பிடுகின்றோம்.

சரி, இந்த அதிர்வுகள் மற்றும் அலைவரிசைக்கும் நமக்கும் என்ன தொடர்புன்னு பார்பபோம். நம்முடைய உடலும் அணுக்களால் ஆனது. இந்த அணுக்களும் நகர்வதன் மூலம் இந்த அதிர்வுகள் உருவாகிறது. நம்முடைய செவிகளின் கேட்கும் திறன் 20 முதல் 20000 Hz அலைவரிசைல இருக்க சத்தத்தை மட்டும் தான்.

நம்முடைய எண்ணங்கள்மற்றும் உணர்வுகளுக்கும் அதிர்வுகள் உண்டு. இதை Low Vibration மற்றும் High Vibration இரண்டாக பிரிக்கலாம். Neutral Point என்பதை மையமாக கொண்டு அதற்கு மேல் உள்ள அதிர்வுகள் High Vibration மற்றும் அதற்கு கீழ் உள்ள அதிர்வுகள் Low Vibration என்றும் அறியப்படுகிறது.

இந்த High Vibration எல்லாம் நேர்மறை கொண்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை உள்ளடக்கியது. அதேபோல் Low Vibration எல்லாம் எதிர்மறை எண்ணங்களை மற்றும் உணர்வுகளை உள்ளடக்கியது.

நாம எந்த மாதிரியான அதிர்வு உள்ள எண்ணங்களை மற்றும் உணர்வுகளை கொண்டிருக்கோமோ அதை சார்ந்த அதிர்வுகளையே நம்மை நோக்கி ஈர்க்கிறோம். 

நம்முடைய உடல் எல்லா விதமான அதிர்வுகளையும் வெளிவிடக் கூடியதாகவும் கிரகிக்க கூடியதாகவும் தான் அமைச்சு இருக்கு. இதையே தான்,நம் முன்னோர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதை பார்ப்போம். கோவில்களில்  மந்திரம்,யந்திரம், முத்ரா, தீர்த்தம், பிரதிஷ்டை முறைகள் மூலமாகவும் ஜீவசமாதிகள்,  பூஜை முறைகள், தியானம் மற்றும்  சில வாழ்வியல் முறைகள் மூலமாகவும் அதிர்வுகளை உபயோகிக்கும் அறிவை பெற்று இருந்தார்கள் நம்மவர்கள். இந்த அதிர்வுகளை முக்கியமாக ஒலிகள் அதாவது மந்திரங்கள் மூலமாக சுலபமாக மாற்ற கற்று இருந்தார்கள். மந்திரங்களை மொழியாக கண்டு, அதற்கு என்ன அர்த்தம்னு யோசிக்க தேவையில்லை. நம்முடைய பதினென் சித்தர்கள் பிரணவ மந்திரமான (அஉம்) ஓம் -ஐ பயன்படுத்தித்தான் சிவனை அடைந்தார்கள் என்று சொல்லப்படுவதும் உண்டு.   

இந்த பிரணவ மந்திரமான அஉம்  தன படைப்பின் மூலம் தான் என்று கேள்விப்பட்டுள்ளோம். இது தான் இந்த பிரபஞ்சத்தோட இயல்பான சத்தம்னு சொல்லுறாங்க. அதாவது பெருவெடிப்பு நடந்து தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது. அப்போது தான் ஒளி மற்றும் ஒலி வெளிப்பட்டது. இதைத்தான் விந்து நாதம் என்றும் குறிப்பிடுகிறோம். இந்த ஓம் சத்தத்தை பௌத்த மதமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதை பிரபஞ்சத்தின் சத்தம் என்று குறிப்பிடுகிறார்கள். 

அவ்வெனும் எழுத்தினால் அகண்டமேழு மாகினாய்

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே 

என்பது சிவவாக்கியர் சித்தரின் பாடல்.

 இவ்வாறாக தான் சித்தர்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட வடிவங்களையும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்துடன் இணைந்து பயன்படுத்தினார்கள்.

தற்போது கூட, Sound therapy மற்றும் music therapy போன்ற சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி வருகிறோம். பிரபஞ்ச விதிகளில் இந்த அதிர்வு விதி தான் நம்முடைய வாழ்வை வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் அதிகமாக பாதிக்கிறது.

இதை பற்றிய காணொளிக்கு எங்களின் YouTube Channel – Subscribe செய்யவும். https://www.youtube.com/@YaazhLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English