சித்தர்கள் என்பவர்கள் உள்ளுலக விஞ்ஞானிகள் அவர்கள் தன் சித்தத்தை கண்டு தெளிந்தவர்கள்.

விஞ்ஞானிகள்– நாம் வாழும் இவ்வெளிஉலகில் ஆராய்ச்சி செய்து அதன் மூலம் பல நன்மைகளை உருவாக்கி தருவார்கள். அதேபோல் உள்ளுலகை ஆராய்ச்சி செய்து அதன் மூலம் பல நன்மைகளை உருவாக்கி தருபவர்கள் மெய்ஞானிகள் என்னும் சித்தர்கள்.

இப்போது இங்கே எழும் கேள்வி வெளியுலகம் மற்றும் உள்ளுலகம் என்றால் என்ன?

நம் கண்ணால் பார்க்க கூடிய மற்றும் தொட்டு உணரக்கூடிய பொருட்களை அதாவது நாம் தினமும் உபயோகிக்க கூடிய வாகனங்கள், திட மற்றும் திரவ பொருட்கள், துணிகள், மருந்துகள் மற்றும் மின் உபயோக பொருட்களை பற்றி ஆராய்ந்து உருவாக்குபவர்கள் விஞ்ஞானிகள். இவற்றையே நாம் வெளியுலக பொருட்கள் என்போம்.

மெய்ஞானத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் அதிக தொடர்பு உண்டு. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மெய்ஞானம் என்பது என்றுமே உள்ள உண்மையான பொருட்களின் தத்துவத்தை அறிவது.

விஞ்ஞானம் என்பது அழியக்கூடிய அல்லது மறையகூடிய பொருட்களை பற்றி அறிவது. விஞ்ஞானிகளின் இவ்வகையான மனிதர்கள் உபயோகிக்க கூடிய பொருட்களை பற்றிய ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  

மெய்ஞானிகளும் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது, உயிர்கள் (ஜீவன்) படும் அவஸ்தைகளையும் மனிதர்களிடைய உள்ள ஏற்ற தாழ்வுகளையும் எவ்வாறு களைவது என்பது பற்றியே. இவ்வகையான மெய்ஞான ஆராய்ச்சிக்கள் நம் நாட்டில் என்றோ முடிந்துவிட்டன மற்றும் அவற்றின் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த மெய்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களே சித்தர்கள் என அழைக்கபடுக்கிறார்கள்.

இவர்களை பற்றி நம் நாட்டில் பல கருத்துக்கள் சொல்லபடுகின்றன. அதாவது அவர்களின் தோற்றம், செய்கை, சித்துக்கள் இப்படி பல வகைகளின் மூலம் அடையாள படுத்துகின்றார்கள். ஆனால் அவர்கள் இப்படிப்பட்டவர்களா ? என்று கேட்டால், இல்லை என்றே சொல்லலாம்.

ஏனென்றால் அவர்களின் அடையாளத்தை உறுதியாக கூறமுடியாது. மக்களின் அதீத கற்பனையாலும் மற்றும் நம்பிக்கையாலும் அவரவர்களுக்கு ஏற்றவாறு கூறிக்கொண்டே வருகின்றனர்.

அப்படியெனில்,

யார் இந்த சித்தர்கள் /மெய்ஞானிகள் ?

இவர்களுக்கு அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்தது?

இவர்களுக்கு மரணம் உண்டா? இல்லையா?

மரணம் இல்லையெனில் இவர்கள் இப்போது எங்கே?

இதை நம் அறிவை கொண்டோ அல்லது நம் விஞ்ஞான தெளிவை கொண்டோ கண்டுகொள்ளமுடியாது.

உதாரணத்திற்கு, நம் வாழும் உலகம் எத்தனை பரிமாணங்களை கொண்டுயுள்ளது தெரியுமா? நம் பாட புத்தகத்தில் முப்பரிமாணம் (3D) என்றே உள்ளது. இந்த முப்பரிமாணம் என்றால் என்ன? இது நீளம், அகலம், மற்றும் உயரம். இதை நம் கண்களால் பார்க்க முடியும்.

இருபரிமாணத்தை (2D) நாம் பார்த்துள்ளோமா? அது என்ன?

திரையில் நாம் பார்க்கும் படங்கள் மற்றும் நிழற்படங்கள். இவை நீளம் மற்றும் அகலத்தை கொண்டு உள்ளது. இவற்றில் ஆழத்தை (depth) பார்க்க இயலாது.

இந்த காலங்களில் 3D திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை 3D கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்கமுடியும். இதில் படங்களின் நீளம்,அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றை காண இயலும்.

இவற்றை தவிர வேறு பரிமாணங்கள் இருக்கின்றனவா?

 ஆம், இருக்கிறது. அதுவே, 4D என்னும் பரிமாணம் இதில் நீளம்,அகலம்,ஆழம் மற்றும் காலம் ஆகிய பண்புகளை கொண்டது. இவற்றில் காலத்தை எப்படி கணிக்கின்றார்கள்? கடிகாரம் கொண்டே தான். ஆனாலும் , கடிகார நேரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஏனெனில், நாம் கணிக்கும் காலம் பூமியின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்டது. 

எனில், இந்த காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு என்ன? மற்றும் எங்கே உள்ளது?

நம்முடைய ஒருநாள் என்பது மற்ற சில சிறு உயிரினங்களுக்கு (புழு , பூச்சி ) வாழ்நாளாகவே அவற்றின் அனுபவத்தில் உள்ளது(ஏறக்குறைய 50 முதல் 100 வருடங்கள்).

இதுபோலவே, நம்முடைய அனுபவத்தில் உள்ள காலமும் நம் இவ்வுடலோடு இருக்கும்போது மற்றும் உடல் இல்லாதபோதும் மாறுபடும்.உதாரணத்திற்கு, உறக்கத்தில்  நாம் காணும் கனவு நீண்ட நெடு கனவாக இருக்கும்போதும், நாம் விழித்தவுடன் அவை வெறும் 5 முதல் 10 நிமிடங்களாகவே உணர்கிறோம்.

மேலும், நம் யோக கலாச்சாரத்தில் 7 பரிமாணங்களும், புத்த கலாச்சாரத்தில் 33 பரிமாணங்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவற்றை, நாம் அறிவியலால் அறிய முடியுமா? அல்லது நம்முடைய உயர்நிலை அல்லது முதுநிலை கல்வியால் படித்த அறிவை கொண்டு புரிந்து கொள்ள முடியுமா?  எனில் , முடியாது. ஏனெனில் இந்த பரிமாணங்கள் நாம் அறிந்த அறிவியலை விட உயர்ந்தவை.

விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எல்லாம் பொய்யாகுமா?

இவ்வளவு வளர்ச்சி அடைந்த விஞ்ஞானத்தை கொண்டும் கூட நம்முடைய உயிரை அளக்கும் கருவிகள் உண்டா?

மனதை கண்டறியும் கருவிகள் உண்டா?

உணர்வை கண்டறியும் கருவிகள் உண்டா?

மேலும் இவை நம் உடலில் எங்கே உள்ளன? இவற்றை நம் அறிவியல் கொண்டு கண்டறிய முடியவில்லை எனில் இவை அனைத்தும் பொய்யா?

பின், எப்படி புரிந்து கொள்வது. முதல் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உயர்நிலை பாடத்தை சொல்லி புரியவைக்க முடியுமா? முடியாது என்பதே பதில்.

அப்படியெனில், அவன் வளர்ச்சி அடைய வேண்டும். மேலும் அதற்கு அவனுடைய காலம் தரும் அனுபவமும் ஒத்துழைக்க வேண்டும்.

இனி வரும் பதிவுகளில் இப்பரிமாணங்களை உணர்ந்த சித்தர்களை பற்றியும் அவர்கள் கண்ட ஞானத்தையும் காணலாம்.

– தொடரும்

2 thought on “சித்தயோகிகள் – சித்தர்களின் அடிப்படை மற்றும் மெய்ஞானத்தின் பரிமாணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English