அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவுல அடுத்ததா யூனிவேர்சல் லவ்ஸ் தொடர்ல பார்க்க இருக்க விதி தூண்டப்பட்ட செயல்விதி (Also ) Law of Inspired Action

தூண்டப்பட்ட செயல்விதி என்பது நாம் நம்முடைய வாழ்க்கையில் இலக்குகளை அடைவதற்கு வெறுமனே ஈர்ப்பு விதியின் சொல்லிட்டு உட்கார்ந்து இருக்காம அதை அடைவதற்கான சில செயல்களையும் செய்யணும்கிறதுதான்

அதுக்குன்னு, வெறும் செயல் மட்டும் போதுமான? அதுவும் இல்லை. அந்த செயலுக்கு சில வரையறைகள் இருக்கு. எதைசெய்யணும் எதை செய்யக்கூடாதுனு தெரிஞ்சு இருக்கணும்.

எல்லாம் அவன் செயல்

நாம் செய்யுற நினைக்குற செயல்கள் எல்லாமே முதலில் நம்முடைய செயல்கள் இல்லை, இவை இந்த பிரபஞ்சத்தின் செயல்கள்னு நாம புரிஞ்சுக்கணும்.

இந்த தூண்டப்பட்ட செயல்களை தன்னிசையான உள் தூண்டுதல்களாக இந்த பிரபஞ்சம் நமக்கு உணர்த்தும். அதுவே நம்மை செயல்பட தூண்டும்.இப்படியாக இந்த பிரபஞ்சத்துடன் ஒத்திசைவாக செயல்படும் போது மட்டும் தான் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும்னு சொல்லுறாங்க.

அடுத்தது உங்கள் விருப்பம் ஒரே செயலால் நிறைவேறிவிடாது. முதலில் வரும் தூண்டுதலால் ஒரு செயல் செய்யும்போது அது சரியானதா இருக்கும்பட்சத்துல அது அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நம்மை பயணிக்க செய்யும்.

இப்படி நாம் ஒத்திசைவோட பிரபஞ்சத்துடன் பயணிப்பது ஒரு மின்னோட்டத்தின் மேல் பயணிப்பது மாதிரி சுலபமாக இருக்கும். அதை நாம் தடுக்காம இருக்கமட்டும் கத்துக்கிட்டபோதும்.

Law of Correspondence – வாழ்வே கண்ணாடி பிம்பம்

நாமே குறுக்கீடு

அதை எப்படி நாம் தடுக்குறோம்னு யோசிக்கிறீங்க தான , சிலநேரத்துல நமக்கு அடிக்கடி இரண்டு விதமான யோசனைகள் தோணும். ஒன்று, எது எப்படி இருக்குமோ அது அப்படி தானு அதை நாம் மாத்தமுடியாது. இன்னொன்று, நமக்கு ஒன்று தேவைனா, நாம் தான் அதை எப்படியாவது செய்யணும்- னு தோணும்.

இப்படி தான் நம்மை நம் மனசு ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளும். அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு எல்லாருக்கும் தெரிச்சதுதான்.

நாம் நம்முடைய உள்ளுணர்வை கேட்பதை நிறுத்தினாலும் நமக்கு நஷ்டம் தான். இந்த தூண்டப்பட்ட செயல், ஒன்னுமே செய்யாமல் சும்மா இருப்பதற்கும், குருட்டுத்தனமா கடமைக்கேனு செய்யுறதுக்கும் நடுவுலதான் ஒளிச்சுட்டு இருக்கு.

இந்த இரண்டையுமே எப்படி நாம் கையாள்கிறோமோ அதை பொறுத்துதான் அமையும்.இந்த இடத்துல தான் விழிப்புணர்வு தேவைப்படுது. நாம் ஒரு புரிதலும் இல்லாம எதையுமே அடையமுடியாது.

அதாவது நமக்கு யாரு மூலமாவதும் ஒரு விஷயம் நடக்குமான நாம் அவங்கள வைச்சு அந்த விஷயத்தை எப்படியெல்லாம் சாதிக்கலாம் அப்படினு யோசிச்சு அதை மட்டும் செய்வோமோ அது மாதிரிதான்.

இந்த தூண்டப்பட்ட செயல், நம்மோட எண்ணங்களுக்கும் நம்மோட எதார்த்தமான வாழ்க்கைக்கும் நடுவுல உள்ள பலம் மாதிரிதான். நம்முடைய இலக்கை அடையணும்னு விரும்பினா,நமக்கு உள்ளேயும் வெளியேயும் செயல் செஞ்சுதான் ஆகணும்.

செயல் பற்றி, திருவள்ளுவர் நிறைய சொல்லிருக்காரு. அதுல நாம் இதை தெரிச்சுக்கிட்ட ஒரு தெளிவுக்கு வரலாம்னு நினைக்கிறேன்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

ஒருவன் செய்யத்தகாத செயலை செய்வதாலும் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதாலும் கெடுவான்.

இந்த தூண்டப்பட்ட செயல் இருமுனை கத்தி மாதிரி, எப்படி உபயோகிறோம்னு தெரிஞ்சவர் ஆள்வான், தெரியாதவர் அதோகதி தான்.

நம்மோட உள்ளுணர்வு மற்றும் நம்மை சுத்தியுள்ள நுட்பமான ஆற்றலை தொடும்போது இந்த தூண்டப்பட்ட செயல் நமக்கு முழுப்பலனையும் தரும். நன்றி…!

எங்களுடைய YouTube Channel – Subscribe செய்து இதுபோன்ற பதிவுகளை காணொளிகளாக காணுங்கள்.

https://youtu.be/XpwD-MgiLls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English