Law of Cause and Effect

அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவுல Universal Laws தொடர்ல நாம் பார்க்க இருக்க விதி Law Cause and Effect அதாவது காரணம் மற்றும் விளைவு விதி அல்லது காரணம் காரிய விதினு சொல்லலாம்.

இந்தப் பதிவுல இந்த விதி எப்படி செயல்படுத்தனும் Butterfly effect எப்படி இந்த விதிக்கான எடுத்துக்காட்ட இருக்கு,எல்லா மத மற்றும் கலாசாரமும் எப்படி இந்த விதியை ஒரு பகுதியா வைச்சுருக்காங்கனும் , இந்த விதியின் பழமைத்தன்மையை திருக்குறள் மற்றும் சித்தர் பாடல்கள் கொண்டு விளங்குதுனும் பார்க்கலாம்.

Law of Cause and Effect – காரணம் மற்றும் விளைவு விதி

Law of Cause and Effect – காரணம் மற்றும் விளைவு விதி என்பது ஒவ்வொரு குறிப்பிட்ட விளைவும் ஒரு காரணத்தையும் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணமும் ஒரு விளைவையும் கொண்டிருக்கு. மேலும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது மற்றும் தற்செயலா எதுவும் நடப்பது இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் நடக்குற எல்லா நிகழ்வுகளும் ஒரு காரணத்தையும் அதற்கான விளைவையும் அதற்குள்ளே கொண்டிருக்கு மேலும் எதுவுமே இங்க தற்செயலாகவோ \ அதிர்ஷ்டத்தின் பெயரிலோ நடப்பது இல்லை.

இந்த இடத்துல ஒரு விஷயத்தை மறந்துட்டோமா? காரணம் மற்றும் விளைவு இருக்குன்னா இது இரண்டையும் தொடர்பு படுத்துவது செயல் தானா? அதாவது ஒரு செயலுக்கு தான் காரணம் மற்றும் அந்த செயலுக்கான விளைவு இருக்குனு.

அப்படிப்பட்ட செயலை தான் இந்த Universal Law ல தனி விதியாக Law of Inspired Action – தூண்டப்பட்ட செயல் விதினு சொல்லிருக்காங்க. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உள்ளது, என்பது பிரபஞ்சம் மற்றும் மனித வாழ்க்கையையும் நிர்வகிக்கஅடிப்படை கொள்கை. இதும் காரணம் மற்றும் விளைவு விதியின் ஒரு பகுதி தான்.

மேலும் நம்முடைய செயல்கள் மட்டும் இன்றி நம்முடைய எண்ணங்களும் அதற்கான விளைவுகளை உருவாக்குகின்றன.

இந்த காரணம் மற்றும் விளைவு விதியை நம் சுலபமா புரிச்சுக்க தான் Butterfly effect ஐ எடுத்துக்காட்ட சொல்லிருக்காங்க. ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச்சிறிய செயல் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளால் நாம் எதிர்பார்க்காத பெரும் விளைவையும் தோற்றுவிக்கக்கூடும் என்பது தான் Butterfly effect யின் சுருக்கம்.

கலாசாரத்திலும் மதங்களிலும்

பழங்காலம் முதலே, ” நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்” என்று சொல்வதன் மூலம் இந்த காரணம் மற்றும் காரிய விதியை எளிதாகவே புரிந்துகொண்டுள்ளோம் என்பது தெளிவாகிறது.

இந்து மற்றும் பௌத்த மதங்களில், கர்மாவின் மூலமாக இந்த காரணம் மற்றும் விளைவு விதியை பற்றிய கருத்து வழிவழியாக சொல்லப்பட்டுவருகிறது. கர்மா என்றால் செயல் அல்லது வேலையை குறிக்கும். மேலும் செயலுக்கான காரணம் மற்றும் அதன் விளைவையும் சேர்த்தே குறிக்கிறது.

பைபிளும் இந்த காரணம் மற்றும் விளைவு விதியை பற்றி ” மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று கூறுவதன் மூலம் இந்த விதிக்கு வழு சேர்க்கிறது.

சித்தரும் திருவள்ளுவரும்…

சித்தர்களில் ஒருவரான குதம்பாய் சித்தரின் பாடல்களில் இந்த காரணம் மற்றும் காரியத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்

ஆரணம் சொல்லுதடி குதம்பாய்

ஆரணம் சொல்லுதடி குதம்பாய்”

“ காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றும்

தாரணி சொல்லுதடி குதம்பாய்

தாரணி சொல்லுதடி குதம்பாய்”

இந்த வரிகளின் மூலம் காரணம் மற்றும் காரியம் ஆகிய இரண்டும் ஒரு நிலையான தன்மையின் இரண்டு பாகங்கள் என்று வேதத்திலும், அதில் காரணம் முற்பாகமாகவும் காரியம்அதாவது விளைவு பிற்பாகமாக உள்ளதாக கூறுகிறார்.

உலகபொதுமறையான திருக்குறளில் திருவள்ளுவர் – இந்த காரணம் மற்றும் காரியத்தை “ஊழ்” என்று குறிப்பிட்டு ஒரு அதிகாரமே தந்துள்ளார்.

இதில் சில குறள்களை மட்டும் இஙபார்ப்போம்.

” ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

 போகூழால் தோன்றும் மடி”

– பொருள் சேர்வதற்கான ஊழ் இருந்தால் சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும், இருப்பதை இழப்பதற்கான ஊழ் இருந்தால் சோம்பல் உண்டாகும் என்று கூறுகிறார்.

“நல்லவை எல்லா அந்தீயவாம் தீயவம்

நல்லவாம் செல்வம் செயற்கு”

– நல்ல செயல்களை ஆற்ற முற்படும் போது அவை தீமையில் போய் முடிந்துவிடும்,தீய செயல்களை ஆற்றிட  முனையும் போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதுமே ” ஊழ் /இயற்கை ” எனப்படும்.

“ஊழிற் பெருவலி யாவள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்”

– ஊழை / இயற்கையை விட வலிமையானது வேறு எதுவுமில்லை, அந்த ஊழை தவிர்க்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தால் அங்கும் தானே முன்வந்து நிற்கும் அந்த ஊழ்  என்று அதன் வலிமையை விளக்குகிறார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

-என்று சொன்ன அதே திருவள்ளுவர் ஊழ் பற்றி இதுபோன்று சொல்வது எவ்வாறு எடுத்துக்கொள்வது.

காரணம் அறிந்து காரியம் ஆற்றுவோம். நன்றி ..!

எங்களுடைய YouTube Channel – Subscribe செய்து இதுபோன்ற பதிவுகளை காணொளிகளாக காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English