அனைவருக்கும் வணக்கம்

Law of Attraction , ஈர்ப்பு விதி , Secret , இரகசியம் இந்த வார்த்தைகளை தான் பல காலங்களை social medias ல குறிப்ப You tube ல மவுசு குறையாம சுத்தி வந்துகொண்டிக்கிறது

அப்படி என்னதான் சொல்ல வராங்க ஈர்ப்பு விதி இல்ல, இரகசியம்  பற்றி தெரிச்சுகிட்டா போதும் நீங்க விருப்பப்பட்டது எதையும் உங்களுக்கு அளிக்கும் , மகிழ்ச்சி , ஆரோக்கியம் , செல்வம் என்று எதுவென்றாலும்.

நாம் தேர்ந்தெடுக்கும் எதை வேண்டுமானாலும் நாம் பெறலாம் எது எவ்வளவு பெரியது என்பது ஒரு பொருட்டல்ல

இப்படி தான் இதுவரைக்கும் இதை பற்றி கேள்விப்பட்டிருக்கோம்

இது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை ,  Law of Attraction na என்ன ? இது ஒன்னு தெரிச்சுக்கிட்ட போதுமா நாம் நினைச்சதை அடைய , இன்னும் பல விஷயங்களை இந்த காணொளில பாப்போம்

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல,   இந்த குறளுக்கான பொருளை பின்னால பார்க்கலாம் 

  முதல இந்த ஈர்ப்பு விதினா என்னனு தெரிச்சுக்குவோம் –    the secret                         எனும் புத்தகத்தை வச்சி இந்த விதியா பத்தி தெரிச்சுக்கலாம் .  ஈர்ப்பு விதி தான் அந்த இரகசியமேனு சொல்லுது இந்த புத்தகம்

நம்ம வாழ்க்கையில நாம் கவனம் செலுத்தும் எதையும் ஈர்க்கும் திறன் தான் ஈர்ப்பு விதி, மேலும் எல்லாம் எண்ணங்களும் இறுதியா நிகழ்வுகளா மாறும் அப்படினு சொல்லுறாங்க. நம்முடைய நல்ல எண்ணங்கள் நல்ல விஷயங்களையும் நம்முடைய தீய எண்ணங்கள் தீய விஷயங்களையும் நமக்கு தரும்னு சொல்லுறாங்க

இனி இந்த விதிக்கான விதிமுறைகளை பார்ப்போம்

வேண்டாம், இல்லை, கிடையாது போன்ற வார்த்தைகளை கூறும்போது ஈர்ப்பு விதி அந்த வார்த்தைகளை நேர்மறைய எடுத்துக்கொள்ளும்.  எடுத்துக்காட்ட, நான் தாமதமாக போக கூடாது னு நினச்சா , ஈர்ப்புவிதி இத     நான் தாமதமா போகணும் னு எடுத்துகுமாம்.  SO ஈர்ப்புவிதிய பயன்படுத்தும் போது NO எதிர்மறை வார்த்தைகள்

அடுத்து , உணர்வு பூர்வமாக இந்த விதியை அணுகும் போது இன்னும் விரைவா நடைபெற துவங்குமாம் நம் எண்ணங்கள்

நீங்க சுய நினைவோடு இல்லாம நினைக்குறதா கூட ஈர்ப்புவிதி எடுத்துக்கொள்ளுமாம்

உங்களுக்கு நல்ல உணர்வுகள் தரும் எண்ணங்களே ஈர்ப்புவிதியை, விரைவாக செயல்படுத்தும், எனவே உங்கள் உணர்வுகளை கண்காணிக்கவும்

உங்களுக்கு கெட்ட உணர்வுகளை தரும் எண்ணங்களை, நல்ல எண்ணங்களாக மாற்ற வேண்டும். அதுக்கு இரகசிய மனமாற்றிகளை பயன்படுத்த சொல்றங்க. அந்த மனமாற்றிகள் , இனிய நிகழ்வுகள், இயற்கை காட்சிகள், உங்களுக்கு பிடிச்ச இசை, பாடல் அல்லது நபர் இப்படி எதுவா வேணாலும் இருக்கலாம் 

இவை உங்கள் உணர்வுகளை ஒரு சொடுக்கு போடும் நேரத்துல உங்க எண்ணங்களை மாற்ற கூடியதா இருக்கனும் சரி  அடுத்ததா இந்த விதியோட செயல் முறையை பார்ப்போம்

முதல் படி, கேளுங்கள்

Just கேட்பது. அதாவது, இந்த பிரபஞ்சத்திற்கு ஆணையிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை இந்த பிரபஞ்சத்திடம் தெரிவியுங்கள் அது நிறைவேற்றும்

இரண்டாம் படி, நம்புங்கள்,  just believe that. நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கனவே உங்களுக்கு கிடைத்துவிட்டதாக நம்புங்கள்.

அது எப்படி கிடைக்கும், எப்படி நடக்கும் , இந்த பிரபஞ்சம் அதை எப்படி உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்  என்பது உங்களுக்கு தேவையில்லாதது மற்றும் அது குறித்து சந்தேகப்படாதீர்கள்

மூன்றாம் படி, பெறுங்கள்

உங்களுக்கு உங்களின் எண்ணத்தை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றி விட்டது. இவ்வளவுதாங்க ஈர்ப்புவிதி.

சரி இதற்கு பின்,நம்முடைய கருத்துக்களை பார்ப்போம். இதுவரைக்கும் நம பார்த்த விஷயங்கள் தன ஈர்ப்புவிதி பத்தி இந்த புத்தகத்துல சொல்லப்பட்டது. இந்த கேட்டும் போதே இதற்கு முன்னாடி எங்கையோ கேட்ட மாதிரி இருக்க உங்களுக்கு. இந்த விஷயத்தை தான் இதுவரைக்கும் நம்மக்கு முன்னாடி இருந்தே பெரியவங்களால சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதை எல்லாம் தாண்டி அவங்களோட கருத்துக்கள் இருந்துச்சு, வெறும் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற கதையை இல்லாம இருந்துச்சு.  

சரி இது எல்லாம் இருக்கட்டும் , இந்த புத்தகத்துல இருக்குற பல விஷயங்கள் எல்லாம் ரியாலிட்டி ஓடிஏ பொருத்தமே இல்லாம இருக்குது.  நாம கேட்டுறது எல்லாம் கிடைக்கும் தெரிச்ச எல்லாரும் சும்மா உட்காந்து கேட்டுகிட்டே இருந்த போதும்னு இருந்திரமாட்டாங்களா ?

தொடரும் ….

அடுத்த பதிவுல இன்னும் நிறைய விஷயங்களை பார்ப்போம்

One thought on “பிரஞ்சத்தை அறிய செய்யும் ஈர்ப்பு விதியின் மறுபக்கம் பகுதி 1 \ Law of Attraction”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English