இன்று நாம் உடலை பற்றி பார்க்க போகிறோம்.

இந்த உடல் என்பது என்ன? இதன் அடிப்படை என்ன ?

இது எந்த விதமாக செயல்படுகிறது ?

இதற்குள் என்ன விதமான மாற்றங்கள் உருவாகிறது ? 

இதை உருவாக்கியது யார் ?

இது போன்ற அன்றாடம் நம்முள் எழும் மிக சாதாரண கேள்விகளுக்கான பதில்களை இனி வரும் தொடர் பதிவுகளின் மூலம் ஆராய்வோம் .

மருத்துவ அடிப்படையில்

மருத்துவம் கூறுகிறது – இந்த உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது என்றும், எல்லா செல்களும் ஒருங்கிணைத்து செயல்பட்டு உடல் என்கிற இயந்திரம் அதன் தொகுப்பாக செயல்படுகிறது என்றும்,மேலும் பல உள்ளுறுப்புகளை கொண்டுள்ளது.

ஆணுடைய விந்தணுவும் பெண்ணுடைய அண்டமும் இணையும் போது உடல் உருவாகிறது. குரோமோசோம்களை பொறுத்து ஆண் (XY) அல்லது பெண்(XX) என நிர்ணயிக்க படுகிறது. எனவே குழந்தையின் பாலினம் ஆணா அல்லது  பெண்ணா என்பதை ஆணுடைய விந்துவில் இருக்கும் (X) அல்லது (Y) குரோமோசோமே உறுதிசெய்கிறது. ஆண்களுடைய ஒரு விந்தணு (X) அல்லது (Y) குரோமோசோமை மட்டுமே கொண்டிருக்கும். பாலின நிர்ணயத்தில் பெண் இதை ஏற்கும் தன்மையில் மட்டுமே இருக்கிறாள்.

ஜோதிட அடிப்படையில்

ஜோதிடம் கூறுவது என்னவென்றால் , இந்த உடம்பு கிரங்கங்களின் கதிர்வீச்சினால் உருவாக்கப்படுகிறது . மேலும் இந்த பூமியில் உள்ள அத்தனை தாவரங்கள், விலங்கினங்கள் , பூச்சிகள், பறவை இனங்கள் உருவாக அடிப்படை காரணம் கிரகங்கள் என்று கூறப்படுகின்றன. எப்படி?

சில அடிப்படை விஷயங்களை மட்டும் கூறுகிறேன். ஆதாவது, நம் உயிர் சக்திக்கு அடிப்படை சூரியனும், உடல் , மனம் , சக்தி மற்றும் உருவாக்கத்திற்கு சந்திரனும் , இரத்தத்திற்கு செவ்வாயும், சனி நம் எலும்பு  மண்டலத்திற்கும் , புதன் நரம்பு மண்டலத்திற்கும் காரகமாக இருக்கின்றன.இதனுடைய விரிவான தத்துவங்கள் இனிவரும் தொடர் பதிவுகளில் வெளிப்படும். உடல் உருவாவது , ஆணுடைய விந்துவின் மூலம் நம் உடலுக்கு செயல்படும் கிரக சக்திகள் நம்முடைய இராசயனங்கள் மூலம் பெண்ணின் உடம்பிற்கு செலுத்தி செயல்பட்டு ஒரு சிசுவாக பரிணாமம் அடைகிறது .

ஆன்மீக அடிப்படையில்

ஆன்மிகம் கூறுவது என்னவென்றால் நம் உயிர் எல்லையற்ற இறைசக்தியிலும், மனம் உடல் நாம் செய்த கர்மாவினாலும் (அதாவது செயல்) தகுந்த பெற்றோர்களை தேர்வு செய்து பிறப்பு நிகழ்கிறது.

நம் உடல் 96 தத்துவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் , இதில் மனம் மற்றும் உயிர் அடங்கும். இதன்பின், இவ்வாறாக உருவான உடல் பிராணசக்தியால் இயங்குகிறது என்றும், பிராணன் உடம்பை விட்டு போகும் போது  உடலில் உள்ள செல்கள் செயலாற்றாமல் போகிறது. இதுவே இறப்பு என்று கூறப்படுகிறது.

இதற்கு பின் என்ன பரிணாமத்தை உடல் அடைகிறது?

உடல் எதனுடன் கலக்கிறது?

மனம் என்னவாகிறது? என்பதை இனிவரும் பதிவுகளில் யாம் வெளிப்படுத்துவோம். இதன் மூலம் நாம் பகுத்து பார்ப்போமானால் நமக்கு சில உள்ளார்ந்த விஷயங்கள் புலப்படும்.

ஏன் இந்த உடலை பற்றி முதலில் பதிவிடுகிறேன் என்றால் நாம் எந்த செயலையும் இவ்வுடலை கொண்டே செய்கிறோம், அதாவது  தொழிலாகட்டும், பணம் சம்பாதிப்பது ஆகட்டும்.

நம்முடைய உடல் என்ற எந்திரம் சரியாக செயல்படவில்லையென்றால் நாம் எந்த செயலிலும் ஈடுபடமுடியாது. உடலை எந்த விதமாக சரியாக செயல்படுத்துவது என்றால் ஒரு வாகனத்தை இயக்க நமக்கு அதன் அடிப்படை விஷயங்கள் தெரியவேண்டும். அப்போதுதான் அதை இயக்குவது எப்படி என்று தெரியும் அதுபோலதான் நம் உடலும்.ஆனால், நாம் செய்வது இந்த உடல், மனம், எப்படி செயல்படும் என்ற அடிப்படை தெரியாமல் நம் வாழ்க்கை நல்லதாக நடக்க வேண்டுமென்று எண்ணுகிறோம். அதேபோல், நம்முடைய எண்ணம் செயல் எப்படி செயல்படுகிறது என்று தெரியாமல் அடுத்தவருடைய எண்ணத்தையும் செயலையும் அறிய முற்படுகிறோம்.

இனி அடுத்து வரும் பதிவுகளில் உடல், உயிர் , மனம் பற்றிய அரிய விஷயங்களை ஆராய்வோம்.

English