உடலில் உள்ள நோய்களை  குணப்படுத்தவும் அல்லது நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மருத்துவம் பயன்படுகிறது. இன்று பலவகையான மருத்துவ முறைகள் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் பலவிதமான தத்துவங்களும் ஒழுங்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. முக்கியமாக மருத்துவம் உடலின் ஆரோக்கியத்துக்கு துணைபுரிகிறது.

“ஒருவருடைய  உடல் மற்றும்  மனம் சீராக இருப்பதை ஆரோக்கியம் என்று சொல்கிறோம்”

நோய்கள் பெருக பெருக அவைகளுக்கான மருத்துவ முறைகளும் பெருகி கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்றும் அந்நோய்களுக்கான தீர்வு  தான் என்ன?

ஏன் நோய்கள் உருவாகின்றன?

நோய்கள் வராமல் வாழ்வது எப்படி? என்பது போல பல கேள்விகள் நம்மிடையே நீடித்து இருக்கின்றன.

ஒவ்வொரு மருத்துவமும், நோய்களுக்கான பல காரணங்களையும் அம்மருத்துவத்திற்கே உரிய வழியில் ஒவ்வொரு விதமாக கூறுகின்றன. இதில் எந்த மருத்துவம் எந்த நோயளிக்கு பொருந்தும் ? என்பது இன்றளவும் கேள்வியாகவே உள்ளது. மேலும் இது அந்த மருத்துவரையும் பொறுத்தது தான்.

ஆங்கில மருத்துவம் அம்மருத்துவதையே சிறந்தது மற்றும் எல்லாவற்றிக்கும் சரியான மருத்துவம் என்று கூறும். அதேபோல, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, வர்மம், அக்குபங்சர் மற்றும் இயற்கை மருத்துவம் இப்படி எல்லாமும் அவற்றின் மருத்துவ முறைகளே சரியானது என்று வாதிடுகின்றன.

இதில் எது சரி? எது தவறு? என்பது பற்றி பார்க்கும் முன் ஒரு சில விஷயங்களை ஆராய்வோம்.

முதலில், ஆரோக்கியம் பற்றி பார்ப்போம். முன்பை விட இன்று மக்களின் இறப்பு பெரும்பாலும் இயற்கை மரணமாக இருப்பதில்லை. ஏதேனும் ஒரு நோய்வாய் பட்டே இறக்கிறார்கள். நோயினால் ஏற்படாத  மரணத்தையே  இயற்கை மரணம் என்கிறோம். இன்றைய காலத்தில் இது சாத்தியமா என்று கேட்டால் இல்லை  என்றே சொல்லலாம். ஏனென்றால் நம் வாழ்க்கை முறையில் உணவு, தூக்கம் மற்றும் மனநிலை இவற்றை சார்ந்தே நம்முடைய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மேலும் நம் கர்மவினையும் இதில் முக்கிய பங்கு கொள்கிறது.

“கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? அதன் தொடக்கம் மற்றும் முடிவு தன எங்கே? இதை பற்றிய தெளிவாக வேறுவொரு பதிவில் காணலாம்”

அப்படியென்றால் யாருக்கு எந்த மருத்துவம் பார்ப்பது. அது மருத்துவருடைய சோதனையை பொறுத்தது. எப்போதும்  தங்கள் படித்த மருத்துவத்தை சார்ந்தே மருத்துவர்கள் இயங்குவார்கள். இப்படி இருந்தால் நோய்கள் எப்படி சரியாகும் ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவம் தேவைபடுகிறது. இதுதான் இயற்கையான உண்மை. அப்படி இல்லை என்றால் இந்த உலகில் இவ்வளவு மருத்துவ முறைகள் தோன்றி இருக்காது. ஏனென்றால் விதவிதமான மனிதர்கள் விதவிதமான மர்ம நோய்கள் இதை தீர்ப்பதற்கே விதவிதமான மருத்துவ முறைகளை இயற்கை மனிதர்கள் மூலம் செயல்படுத்துகிறது.

இதனையே வள்ளுவர் பின்வரும் குறள் மூலம் கூறுகிறார்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”                                                                    

இதன் பொருள், நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்

இனி ஒவ்வொரு மருத்துவத்தை பற்றியும் பார்ப்போம். ஒரு விஷயத்தை நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

 “ஆரோக்கியம் நம்மை சார்ந்ததே தவிர , மருத்துவதையோ அல்லது மருத்துவரையோ சார்ந்தது அல்ல”

 பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளில் இருந்து , மனிதர்க்கு ஏற்படும் நோய்களில் 90% நோய்கள் மனத்தினாலே ஏற்படுகின்றது என்றும், அவை உடலின் வழியாக வெளிப்படுகின்றன என்றும் தெரியவருகிறது.

இப்பொது ஓர் உதாரணத்தை பார்ப்போம், நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, ஒரு நகைச்சுவை காட்சிகள் வரும்போது நீங்கள் சிரிப்பீர்கள், அதே நேரத்தில் உங்களுடைய உடலில் சிரிப்பிற்கான இரசாயன மாற்றங்கள் ஏற்படும்.அதன்பின், அழுகை, சோகம், சண்டை  மற்றும் கோபம் சார்ந்த காட்சிகள் வரும்போது அதற்கேற்ப உங்களுடைய உடம்பில் இரசாயன மாற்றங்கள் ஏற்படும். காதல் மற்றும் காமம் சார்ந்த காட்சிகள் பார்க்கும்போது அதற்கேற்றவாறு மாற்றங்கள் நிகழும். நீங்கள் காணும் காட்சிகள், மனதால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தியால் (அறிவால்) புரிந்துகொள்ளப்பட்ட பின் உங்களுடைய உடலில் மாற்றங்கள் நிகழ்கிறது. இவை அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நிகழ்க்கின்றன.

இதுபோன்ற காரணங்களால் தான், முன்னோர்கள் சாப்பிடும் போது சாப்பாட்டில் முழு கவனமும் வைத்து சாப்பிட சொன்னார்கள். ஏனென்றால் உடல், வாய் முதல் குடல் வரை பல செரிமான சுரப்பிகள் உணவை முழுமையாக செரிமாணம் செய்ய உதவுகிறது. இப்பொது தாங்கள், மேற்கூறிய நகைச்சுவை உள்ளது சண்டை காட்சியையோ பார்த்து கொண்டு சாப்பிட்டால் உங்களுடைய உடல் எந்த மாதிரியான  இரசாயனங்களை சுரக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இதே போன்று தொடர்ந்தால், செரிமாண மண்டலம் பாதிக்கப்பட்டு பலவிதமான வயிறு சார்ந்த நோய்கள் மற்றும் செரிமாண சுரப்பிகளான கல்லிரல், கணையம் சார்ந்த நோய்களும் உருவாகின்றன அல்லது நம்மால் உருவாக்கப்படுகின்றன.

மற்றுமொரு உதாரணம், நாம் பசிக்கும்போது சாப்பிடுவதில்லை. இன்று பசி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் அந்த உணர்வு? என்ற நிலை வந்துவிட்டது.

ஏன் பசிக்குறது என்று தெரியுமா? நம் உடல் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை உணவே நமக்கு வழங்குகிறது. நம்முடைய ஆற்றல் தீர்ந்து போகும் போது தேவையான ஆற்றலை பெற்றுக்கொள்வதற்கு நம் உடல் நமக்கு பசி உணர்வை உண்டாக்குகிறது. ஆனால்  நம் என்ன செய்கிறோம் , பசி வரும் பொது சாப்பிடாமல் பசி இல்லாதபோது சாப்பிடுகிறோம். இதே பல நாட்களாக தொடர்ந்து நம்முடைய பழக்கம், நம்முடைய வழக்கமாகவே மாறுகிறது. இது தொடரும்போது  நம்முடைய உடலில் கழிவுகள் தேங்க துவங்குகின்றன. பின் அதுவே நோய்களாக வெளிப்படுகின்றன. அதை சரிசெய்ய நம் மருத்துவரை நோக்கி ஓட துவங்குவோம்.

பசி இல்லாத போது உண்ணும் உணவானது, செரிணாமத்திற்கு தேவையான இரசாயனங்கள் சுரப்பதில்லை அந்நேரத்தில் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகாமல் இரைப்பையில் இருந்து அடுத்தடுத்த ஜீரண உறுப்புகளுக்கு தள்ளப்படும். இதே நிலை தான் மற்ற உறுப்புகளிலும் சரியாக ஜீரணமாகாத உணவு கடைசியில்  மலக்குடலுக்குள் தள்ளப்படுகிறது. இவ்வாறு சரியாக ஜீரணிக்கப்படாத உணவில் இருந்து உறிச்சப்பட்டவை கெட்ட கொழுப்புகளாக மாற்றப்பட்டு மற்றும் பல கழிவுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இந்த சேமிக்கப்பட்ட கழிவுகளில் இருந்தே நமக்கு நோய்கள் உருவாகின்றன.

அதிகமான உணவுவை  உள்கொள்ளும்போது நம் ஜீரண உறுப்புகள் தொடர்ந்து அதிகப்படியாக செயல்பட்டு அதன் முழு ஆற்றல் திறனையும் இழக்கின்றன. தொடர்ந்து சாப்பிட்டு வந்த நாம்  ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது நமக்கு மருந்தாக மாறுகிறது. இதை தொடர்ந்து செய்யும்போது  இந்நிலையில் நம் உடல் இரசாயனங்கள்  முதலில் நம் சேமித்து வைத்த கொழுப்பு அமிலங்களையும் அதன் பின் புரத சத்துக்களையும் எடுத்துக்கொள்கின்றன. இருப்பினும், நமக்கு தேவையான ஆற்றல் இல்லாமல்போனால் நம் உடல் செயல்பாட்டை இழக்கிறது.

இந்த இரண்டையும் சமநிலையில் வைக்கும் போது நம் உடல்நிலையில் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

இறுதியாக வள்ளுவர் வழியில்,

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்”

இதன் பொருள், உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

இனிவரும் பதிவுகளில், தூக்கம், மனநிலை மற்றும் உணர்வு எவ்வாறு நம் நோய்களுக்கு காரணமாக மாறுகின்றன என்பதை பார்ப்போம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English