இதற்கு முந்தைய பதிவுல Law of Attraction and The secret Book பத்தி நிறைய விஷயங்களை பார்த்தோம் இந்த பதிவும் அதனுடைய தொடர்ச்சி தான். பகுதி 1 கனா Link

https://www.yaazh.site/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

நாம வேண்டாம் , இல்லை, கிடையாது னு போன்ற எதிர்மறை வார்த்தைகளை எண்ணி ஈர்ப்பிவிதியை பயன்படுத்தின இந்த பிரபஞ்சம் அதை வேணும் னு நேர்மறையா எடுத்துகுமாம் . அவ்வளோ முட்டாள்னு நினைச்சுட்டாங்களா இந்த பிரபஞ்சத்தை. இந்த புத்தகத்துல பிற்பகுதியில வர கதை ஒன்னுல, ஒருத்தர் ஒரு தீம் பார்க் கு அவருடைய குடும்பத்தோட போக்கிருப்பாரு. அங்க முதல் நாள் எல்லா விளையாட்டுக்கும் அவங்க ரொம்ப நேரம் கத்துக்கிட்டு இருக்குறமாதிரி ஆகிரும். அவரு அணைக்கு இரவு இந்த ஈர்ப்பு வித்தியா பயன் படுத்தி வேண்டிப்பாரு, நான் என் குடும்பத்தோட நாளைக்கும் இந்த மாதிரி காத்துகிட்டு இருக்க கூடாதுனு. உடனே மறுநாளே அவரு எல்லாம் விளையாட்டையும் சீக்கிரமா காத்து நிக்காம முடிச்சுருப்பேனு சொல்லிருப்பாரு. இதுல என்னனா , அவரு காத்துக்கிட்டாக கூடாதுனு நினச்சு ஈர்ப்பு விதியை பயன்படுத்துனாதா, அது காத்துடு இருக்கனும் தானா எடுத்து கொண்டிருக்கும். அவருக்கு மட்டும் எப்படி அப்படியே எடுத்து செயல்படுத்தி கொடுத்துச்சு

இந்த புத்தகத்துல இன்னொரு இடத்துல, பிரபஞ்சத்தின் விதிகளே ஈர்ப்புவிதி தான் சக்தி வாய்ந்த விதின்னு சொல்லிருக்காங்க. அப்படினா, இந்த தவிர்த்து இன்னும் விதிகள் இருக்கா, ஏன் அதை பத்தி எல்லாம் சொல்லாம விட்டுட்டாங்க. அது எல்லாம் இரகசியமோ இல்லாம இருக்கோ என்னவோ. சரி அந்த மற்ற விதிகள் என்ன என்னனு கொஞ்ச சுருக்கமா பாக்கலாம்

தெய்வீக ஒருமை விதி இந்த விதியின்படி அனைத்து விஷயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது நம் உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு எண்ணம் செயல் மற்றும் நிகழ்வும் மற்ற எல்லாவற்றோடும் எதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளது சுருக்கமாக நாம் அனைவரும் படைப்பின் மூலத்தோடு இணைக்கப்பட்டுள்ளோம். இது ஒன்னும் கடவுள் ஒருமை பத்தினது அல்ல. நம்முடைய மற்றும் நம்மை சுற்றியுள்ளதை பத்தினது.  அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்   

அதிர்வு விதி இந்த விதியின்படி இந்த ப்ரபஞ்சத்திலுள்ள எல்லாமே ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிர்வுறும் நிலையான இயக்கத்தில் உள்ளன. ஆமாம் , கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா புரியும், இங்க இருக்க எல்லா பொருளும், சக்தியும் எதோ ஒரு குறிப்பிட்ட இயக்கத்துல இருக்குறத. இது அணு அளவுளையும் சரி, அண்ட அளவுளையும் சரி ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியான இயக்கத்தை கவனிக்க முடியும்.  

தொடர்பு விதி தனிப்பட்ட அளவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்குள் என்ன நடக்கிறதோ அதுவே எதார்த்தத்தில் நம் வாழ்க்கையில் கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறது . விதியும் கிட்ட தட்ட ஈர்ப்புவிதி மாதிரிதான், நமக்குள்ள இருக்குற உணர்வு தான் நம்முடைய சூழ்நிலையிலையும் பிரதிபலிக்கிறது. நம்ம உணர்வு நல்லதா இருந்தா, நம்ம சுத்தி நல்ல விஷயங்கள் தானா நடக்கும் னு இந்த விதில சொல்லப்படுது

தூண்டப்பட்ட செயல்விதி உங்கள் இலக்கை அடைய நீங்கள் உண்மையான செயல்படக்கூடிய ஈர்க்கப்பட்ட அல்லது தூண்டப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . இந்த விதில, நம்முடைய பொறுப்பு பற்றி சொல்லப்பட்டிருக்கு. அதாவது, நம்மக்கு தேவையான ஒன்ன அடைய நாமதான் செயல்படணும், நமக்காக யாரும் வந்து செய்யுது தருவாங்கனு உட்கார்ந்து இருக்கக்கூடாதுனு. நல்ல புரிஞ்சுக்கோங்க

ஆற்றலின் நிரந்தர தொடர்மாற்ற விதி இந்த விதியின்படி ஆற்றல் நிலையில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் தொடந்து மாறிக்கொண்டேவருகின்றன. நமக்குள்ள மற்றும்நம்மை சுத்தி ஆற்றல் என்பது எப்போதும்  மாறிக்கொண்டே  இருக்கும். அத பொருத்து தான் நம்முடைய செயல்பாடுகளும் அமையும்.   

காரணம் மற்றும் விளைவுவிதி இந்த விதியின்படி எல்லா நிகழ்வுகளுமே எதோ ஒரு காரணத்திற்காக நடக்கின்றது. மேலும் அந்த நிகழ்வுகள் அடுத்தடுத்த விளைவுளை ஏற்படுத்தும். இப்ப,  இந்த காலநிலை மாற்றம் இல்லனா, புவிவெப்பமயமாதல் எடுத்துக்கிட்ட, அதற்கான காரணம் காடுகளை அழிச்சதும் அதிகபடியான தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றமும் தான், இதோட விளைவா பல இயற்கை சீற்றங்களை  இப்போ நாமதான் அனுபவிக்கிறோம்.

இழப்பீடு விதி உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் மற்றும் பங்களிப்பிற்கும் சமமான இழப்பீடை பெறுவீர்கள் அது எதுவாக இருந்தாலும். அதாவது, நம் செய்யக்கூடிய ஒவ்வொரு சரியான விஷயத்துக்கும் அதற்கான பரிசை பெறுவோம், அதேபோல தவறான விஷயங்களுக்கு அதற்கான விலையை கொடுக்கணும்.  

சார்பியல் விதி,  நம் உலகிலுள்ள விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கவே நாம் விரும்புகிறோம் ஆனால் உண்மையில் எல்லாம் நடுநிலையானது. தனித்து  பார்க்கும்பொழுது அணைத்து விஷயங்களும் நடுநிலையாகவே உள்ளது.

துருவ முனைப்பு விதி பிரபஞ்சத்திலுள்ள எல்லா விஷயங்களுக்கும் எதிர் விஷயங்கள் உள்ளன இது நமது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம்.  இதன்படி, எல்லா விஷயங்களையும் இரண்டு தன்மைகள் இருக்கும். ஒரு நபருக்கு கூட முழுமையா நல்லது இல்லனா கெட்டது னு இல்லாம இரண்டும் கலந்து இருப்பாங்க.

முறை விதி இந்த விதியின் படி எல்லாமே சுழற்சியானது மற்றும் அவற்றில் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்ட, பூமி தொடந்து சுற்றிக்கொண்டே இருக்குறதுனால தான் இரவு பகல் மாறிமாறி வந்துகொண்டே இருக்கு.

பாலின விதி நாம் அனைவரும் பெண்தன்மை மற்றும் ஆண் தன்மை இரண்டையும் வெளிப்படுத்தும் ஆற்றலை  கொண்டுள்ளோம் இதில் வெளிப்புற பாலினத்தை பொறுப்படுத்தாமல் இரண்டையும் நமக்குள் காணலாம்

இவ்ளோ விஷயங்களை நாம கவனிக்கவேண்டியது இருக்கு. தேவைப்பட்டால் இந்த விதிகளை பற்றி விரிவான விஷயங்களை இனி வரும் காணொளிகளில் பார்க்கலாம்.

 ஐயோ, இத சொல்ல மறந்துட்டேன், இப்போ சொன்ன விதிகளை விட முக்கியான ஒரு விஷயம் இருக்கு. அது என்னனா , அதுதான் நம்மளுடைய இயற்கை விதி, இந்த உலகத்துல ஏன் இந்த பிரபஞ்சத்துல தேற்றிய அல்லது பிறந்த எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு அல்லது இறப்புன்னு சார்னு இருக்கும். இந்த உடல் மற்றும் உயிர்கூட நிலைய இல்லாதது.

நன் முதல சொன்ன குறளுடைய கருத்தும் இதுதான். இந்த உடலும் உயிரும் இணைந்திருந்தும்  உடலின் நிலையில்லா தன்மையை பற்றி ஒருகணம் தெரிச்சுக்கணும் நினைக்காதவர்கள், ஆசைக்கு கோடிக்கும் மேலான கற்பனைகளை எண்ணி நிற்பார்கள்.

இந்த ஈர்ப்பு விதி, பொய் அப்படி சொல்ல முடியாது. ஆனா அதை வைத்து மட்டும் வாழ்க்கைல எல்லாத்தையும் அடையமுடியாது. நம் எப்படி சமூகம் சார்ந்து இயங்குறோமோ, அதேபோல தான் ஒவ்வொரு நிகழ்வும் பல விஷயங்களை சார்ந்து இயங்குது.

நன்றி

இந்த பதிவுகள் அனைத்தையும் காணொளியாக காண எங்களுடைய YouTube Channel – Subscribe செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English