வணக்கம் , உங்கள் ஆதரவுக்கு நன்றி!
இதற்கு முந்தைய ஜோதிடப் பதிவில் யுகம், பிரம்மா ஆயுள் ஆகியவற்றை பற்றி ஆராய்ந்தோம்.

இப்பதிவில் ஜோதிடத்தில் முக்கியமாக கருதப்படும் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி பார்ப்போம். மேலும் சூரியனும் சந்திரனும் எவ்விதத்தில் நம் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஆராய்வோம். இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஜோதிடத்தில், சூரியன் நம் உயிர் தன்மைக்கு காரகமாகவும் , சந்திரன் நம் உடல் மற்றும் மனம் தன்மைகளுக்கு காரகமாகவும் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. மேலும் சூரியன் ஜாதகரின் தந்தையை பற்றியும் சந்திரன் ஜாதகரின் தாயை பற்றியும் குறிப்பிடுகிறது.


சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனை ஆதாரமாக கொண்டு இயங்குகின்றன. பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் நம் பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியனை பூமியில் ஏற்படும் ப மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது .
அடுத்து நம் பூமிக்கு அருகில் உள்ள துணைக்கோளான சந்திரனும் பூமியின் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நமது உடலின் பல மாற்றங்கள் சந்திரன் அடிப்படையிலே அமைகின்றன.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் நமது உடல், மனம் மட்டுமின்றி பூமியிலும் பல மாறுதல்களை உண்டுபண்ணுகின்றன.
ஒவ்வொரு கிரகமும் பூமிக்கு அருகில் வரும்போதும், விலகி செல்லும்போதும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்க்கை நடைபெறும் போதும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை பூமியில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன?
பிரபஞ்சத்தில் இன்னும் நமக்கு தெரியாத பல நிகழ்வுகள் ரகசியமாகவே உள்ளன. விஞ்ஞானம் வளர வளர இப்பிரபஞ்சத்தின் பல புதிர்களுக்கு விடை கிடைத்து கொண்டே இருக்கிறது.


சூரிய குடும்பத்தில் சந்திரனை விட பிற கிரகங்கள் பலநூறு மடங்கு பெரியவையாக இருந்தாலும் அவை அதிக தொலைவில் இருப்பதால் அவற்றின் ஈர்ப்பு விசை பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவு குறைவே.

“3D rendering of our home planet with moon and sun.3D render, using an Earth map from NASA (Visible Earth).”


சந்திரன் அளவில் சிறியதாக இருந்தாலும் அது பூமிக்கு மிக அருகாமையில் சுழல்வதால் பூமியின் மேல் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. சந்திரன் கடலில் அலைகளையும் மனிதனில் மனதையும் ஆட்சி செய்கிறது.
பூமி 27% நிலமும், 73% நீரும் கொண்டுள்ளது. சொல்லபோனால் பரந்த நீர் பரப்பின் நடுவே தான் சிறிய நிலப்பரப்பு அமைந்துள்ளது. சந்திரனும் நீரும் நெருக்கிய தொடர்பு கொண்டுள்ளன.


சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது அதன் ஈர்ப்பு விசை பூமியின் மீது அதிகமாக இருப்பதால் கடலின் மீர் சற்று மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதனால் அலைகள் உயரமாக எழும்புகின்றன. சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் அதிகமாகும் பொது அதன் ஈர்ப்பு விசை குறைவதால் கடலில் அலைகளின் உயரமும் குறைகிறது.
பௌர்ணமி நாட்களில் கடலலைகளின் உயரம் உச்சத்தை அடைகிறது. அமாவாசை நாட்களில் அலைகளின் உயரம் மிக குறைவாகவே இருக்கும். மேலும் வளர்பிறை தினங்களில் தினமும் அலையின் உயரம் உயர்ந்து கொண்டே செல்லும், அதேபோல் தேய்பிறை தினங்களில் தினமும் அலையின் உயரம் கிரந்த கொண்டே வரும்.


சந்திரனின் ஈர்ப்பு விசை உச்சமாக இருக்கும் தினங்களில் கடல் மட்டுமின்றி பெரிய ஏரிகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் போன்ற நிலைகளிலும் நீரின் மட்டம் சில அடிகள் உயர்ந்து காணப்படும். மேலும் இந்த வகை மாற்றம் கடலில் வாழும் உயிரினங்களிலும் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் பெரும்பாலான உயிரினங்கள் பௌர்ணமி அல்லது வளர்பிறை தினங்களிலேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கடல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வருவது பெரும்பாலான இனங்களில் பௌர்ணமி அன்றே நிகழ்கிறது.

இதேபோல் நிலப்பரப்பில் வாழும் பல உயிரினங்களின் இனப்பெருக்க நிகழ்வும் பௌர்ணமி நாட்களில் அதிகமாக உள்ளது. மனிதனில் சந்திரன் மனத்தையும் உணர்வுகளையும் இனப்பெருக்க உறுப்புகளையும் இனப்பெருக்கத்தையும் ஆட்சி செய்கிறது. இதுதவிர உடலில் உள்ள அனைத்து திரவங்களையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
நம் உடலில் உள்ள முக்கியமான திரவப்பொருள் இரத்தம். இது தவிர செரிமான சுரப்பிகள் (நொதிகள்), பிற இயக்க நீர்கள் , நாளமில்லா சுரப்பி நீர்கள், உமிழ்நீர் (எச்சில்), சிறுநீர், வியர்வை இவை அனைத்தும் உடலில் உள்ள திரவங்களே.
நம் உடலிலும் 73% நீர் உள்ளது. அப்போது நம் உடலிலும் பௌர்ணமி அமாவாசை நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நம் உணர்வதில்லை. சில நபர்களுக்கு அமாவாசை தினங்களில் வெறுப்பு, விரக்தி அல்லது உடலில் சக்தி இல்லாமல் தோன்றலாம். பௌர்ணமி நாட்களில் அதிகமான கோபம், வேகம், உடல் சக்தி அதிகமாக உள்ளது போன்றவை தோன்றலாம்.
நம் ஆழ்மனதில் எந்த மாதிரியான உணர்வுகள் உறுதியாக அடுத்த கர்மத்தை இயக்குவதற்கு , அதாவது நம் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை பொறுத்து நம்முடைய ஆழ்மனதில் அதற்கேற்ற உணர்வுகள் / எண்ணங்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகமாக வெளிப்படும்.
உதாரணமாக , நீங்கள் அதிகமாக கோபம் படும் நபராக இருந்தால் , பௌர்ணமி போன்ற தினங்களில் இன்னும் அதிகமாக கோபம் வெளிப்படுத்தும் நபராக இருப்பீர்கள்


உங்களுக்கு மனம் சார்ந்த நோய்கள் இருந்தால் , அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் நோயின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். ஏனென்றால், சந்திரன் நம்முடைய மூளையில் சுரக்கும் இரசாயன திரவங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் தான். மேலும் மருத்துவ முறையில் பார்த்தோமானால் மூளையில் சுரக்கபடும் Serotonin.. melatonin.. dopamine இந்த இராசயனத்தில் அதிகமாகவோ, குறைவாகவோ மாற்றம் அடைகின்றன இதனால் நம் மனம் பாதிப்படைகின்றன.


தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English